நைஜீரியாவில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 15 பேர் பரிதாபமாக உடல்கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டனர். மேலும் இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக தெரியவில்லை என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.