நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில், சூரி ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இதைத்தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சிபிசக்கரவர்த்தி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்தில் வில்லனாக நடிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரி இப்படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரஜினிமுருகன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த சூரி காம்போ ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.