Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதிமுக நிர்வாகியை துடிதுடிக்க கட்டையால் தாக்கிய திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் “போலீசார் வலைவீச்சு !!

தேர்தல் காலங்களில் நடந்த முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியை திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை அடுத்த ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி இவர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆவார் இந்நிலையில் தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளின் போது இவருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தரப்பினருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனை அடுத்து தன்னை தாக்க முயற்சி செய்வதாக திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தெய்வசிகாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெய்வசிகாமணியை  வழிமறித்து உருட்டுக்கட்டையால் பயங்கரமாக தாக்கினர் இதனால் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Categories

Tech |