ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷீர் மாகாண பிரச்சனையில் தலிபான்களின் தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி விட்டார்கள். அதன்பின்பு, பஞ்ச்ஷீர் மாகாணத்தில், தங்களை எதிர்க்கும் அமைப்பினரை சமாளிக்க தலிபான்கள் முடிவெடுத்தனர். அப்போது தலிபான்களின் தலைவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, அனஸ் ஹக்கானி மற்றும் முல்லா அப்துல் கனி பரதார் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நிலவியுள்ளது.
அதன்பின்பு, துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் முல்லா அப்துல் கனி பரதருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாகிஸ்தானில் இருக்கும் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும் பரதர், ஆடியோ தகவலை வெளியிட்டு அதனை மறுத்திருந்தார்.
இதனையடுத்து, நேற்று, அனஸ் ஹக்கானி இணையதளத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவில், இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான், இஸ்லாமிய கொள்கை என்னும் ஒரு புள்ளியில் இணைந்திருக்கிறது. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். ஆப்கானிஸ்தானின் வளத்தை உறுதியாக்கவும், அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் தீவிரமாக செயல்படுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.