வாலிபர்களுக்கு இடையே நடந்த தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துசாமிபுரத்தில் பூசத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் உமயவேலு மற்றும் மூக்கன் ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினரிடையே இட தகராறு நீண்டகாலமாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு பூசத்துரைக்கு எதிராக விசாரணையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பூசத்துரையின் வீட்டின் முன்பு வேலுவின் மகன் ஹேமநாதன் மற்றும் மமூக்கனின் மகன் சோனைமுத்து ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் பூசத்துரையின் மகன் தீபக் ராஜா என்பவர் வெளியில் வந்து சண்டை போட்டபோது, இரண்டு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் கோபமடைந்த சோனைமுத்து மற்றும் ஹேமநாதன் ஆகிய இருவரும் சாலையில் கிடந்த பேவர் பிளாக் கல்லை எடுத்து தீபக்கை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் கூலி தொழிலாளியான தீபக் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சோனைமுத்து மற்றும் ஹேமநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.