Categories
சினிமா தமிழ் சினிமா

வெட்டி பயலுங்க சாபம்….. ஊரே பத்தி எரியும்…. விஜய், அஜித் ரசிகர்களுக்கு தேவையா ?

விஜய் அஜித் என மோதிக்கொள்ளும் ரசிகர்களை கடிந்து நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் விவேக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்

சினிமாத் துறையில் விஜய் மற்றும் அஜீத் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள். இவர்களது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிரும்படி மோதிக்கொள்வது கொள்பவர்கள். அதிலும் இருவரது படமும் திரைக்கு வரும் பொழுதெல்லாம் ரசிகர்களின் சண்டையும் தீவிரமாக நடைபெறும். இவர்களது மோதலை நிறுத்தும்படி பல நடிகர் நடிகைகள் வேண்டுகோள் விடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

சமீபத்தில் தொலைக்காட்சியில் விஜய் அஜித் என இருவரது படங்களும் ஒளிபரப்பானதை தொடர்ந்து மீண்டும் ரசிகர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரையொருவர் கடுமையாக திட்டி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதன் காரணமாக சமூக வலைத்தளம் மிகவும் பரபரப்பானது. ரசிகர்களின் இந்த மோதலை நடிகை கஸ்தூரி, நடிகர் விவேக் ஆகியோர் மிகவும் கண்டித்துள்ளனர்.

நடிகர் விவேக் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது “நண்பர்கள் அஜித்-விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்த்த செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. அதில் என்னை டேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறி என்னை டேக் செய்தால் பிளாக் செய்யப்படும். நேர்மறை பதிவுகளுக்காகவே நான் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறேன். பாதுகாப்பாக வீட்டில் இருங்கள்.” எனவும் கூறியுள்ளார்

நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “அஜித்தும் விஜயும் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாகவே இருப்பார்கள். வெட்டி பயலுக உங்களின் சாபத்தினால் அவர்கள் இருவருக்கும் எந்த ஆபத்தும் நேரபோவதில்லை ஆனால் அவமானம் இருக்கும்.  ஊரே பத்தி எரியும் பொழுது கூட சிலருக்கு இந்த மோதல் தான் முக்கியமா ?  திருந்துங்க பிரதர்ஸ்.. வாழு வாழ விடு” என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக வெளியிட்ட பதிவு ஒன்றில் “விஜய் அஜித்தின் ரசிகர்கள் மோதலைத் தவிர்த்து நல்ல காரியங்களில் ஈடுபட வேண்டும்” என கூறியுள்ளார்.

Categories

Tech |