Categories
தேனி மாவட்ட செய்திகள்

மது பழக்கத்தால் வந்த சண்டை… கோபித்துகொண்டு சென்ற மனைவி… கணவரின் விபரீத முடிவு…!!

அடிக்கடி வந்த சண்டையால் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டியில் சீனிவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசகம் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இதனையடுத்து சீனிவாசகம் தினமும் குடிப்பதால் கோபமடைந்த மனைவி 2 மகன்களையும் அழைத்துகொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த சீனிவாசகம் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற வைகை அணை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சீனிவாசகத்தின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |