Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோலி விளையாடியதால் வந்த சண்டை… 3 பேர் படுகாயம்… போலீசார் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சின்னக்கடை மீன்காரத்தெரு பகுதியில் சீனிஜியாவுதீன்(24) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பழைய பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அவரது நண்பர்களுடன் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அதே தெருவை சேர்ந்த இபுராம்சா(27) மற்றும் அகமது அலி இருவரும் சேர்த்து சீனிஜியாவுதீனிடம் கூச்சலிட்டு விளையாடாதீர்கள் என கூறியுள்ளார்.

இதனையடுத்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த சீனிஜியாவுதீன் அவரது நண்பர்களுடன் இணைந்து இபுராம்சா மற்றும் முகமது அலியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும் முகமதும் சீனிஜியாவுதீனை தாக்கியுள்ளார். இதில் அவர்கள் 3 பெரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த 3 பேரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |