நீட் தேர்வை எதிர்த்து டெல்லி சட்டமன்ற அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்தத் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். அதாவது, நாடாளுமன்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக எம்.பி.க்கள் ஆகியோர் இதில் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார். இந்தக்கூட்டத் தொடரில் நீட் தேர்வு, சென்னை-சேலம் 8 வழிச்சாலை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையைக் கைவிடுதல் போன்ற 12 பிரச்சினைகளை அவையில் எழுப்ப நேரம் ஒதுக்கவேண்டும் என வலியுறுத்தியதாகவுன் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.