நாம் காணும் கனவிற்கு பல அர்த்தம் உண்டு. நம் முன்னோர்கள் நம் கனவில் சில விஷயங்களை நமக்கு அனுப்புவார்கள் என்று கூறுவார்கள்.
அந்த வகையில் நம் கனவில் சண்டை போடுவது போன்று வந்தால் என்ன பலன் என்பதை பற்றி எதிர்பார்ப்போம். சண்டை, சச்சரவுகள், அடிக்கடி தகராறு போன்றவற்றில் சிக்கிக்கொண்டு தவிப்பது போல் கனவு கண்டால் தங்கள் வாழ்க்கையில் அமைதியானதாகவும், சுற்றியிருக்கும் அனைவருடன் சுமூக நட்புடன் இருப்பதாகவும் அமையும். அதேபோல் சண்டையில் பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் நமக்கு பகைவர் இல்லை என்று அர்த்தம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து உங்களுடன் நண்பர்களாகி விடுவார்கள்.