செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருகிறது. காலை நிலவரப்படி 20 அடிக்கு மேல் இருந்தது. தற்போது 21 அடி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடிக்கு மேல் இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
இந்த நிலையில் ஏரிக்கு நீர் மட்டம் வேகமாக உயரும் பட்சத்தில் நீர்வரத்து அதிகரித்து மேலும் மழை வரும் என்பதால் நீரானது அதிகமாக வர இருக்கின்றது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் என்றுஅதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கான பணியை தற்போதே அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதற்காக தண்டோரா மூலம் அறிவிப்பு கொடுக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருகின்றனர்.