அதிமுக கட்சியானது கொள்ளையர்களின் கூடாரம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் சார்பாக திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், நாட்டில் ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி, இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல். இந்த இரண்டுக்கும் மத்தியில் பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில் நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு. நிறுவனங்களுக்கு வருமானம் இல்லை, தொழிலாளர்களுக்கு வேலை போச்சு, பலருக்கு வேலை போச்சு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமா என்பது தெரியவில்லை.
இந்த சூழலில் பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் கொடுங்க என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். இதை இந்த அரசாங்கம் காது கொடுத்து கேட்கவில்லை, அதைக் கொடுப்பதற்கு அவர்களுக்கு மனசு இல்ல. இப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் கையில்தான் தமிழ்நாடு சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. அதிமுக என்கின்ற கொள்ளைக்கார ஆட்சிக்குத் தலைமை தாங்க யார் தகுதியானவர் அப்படிங்கறதுதான் சண்டை சமீபத்தில் அந்த கட்சி நடந்துகிட்டு இருக்கு.
கொள்ளையர்களின் அரசர் எடப்பாடி பழனிசாமி தான் என அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்தது ஏன் தெரியுமா ? இன்னும் 6 மாதம் இருக்கிறது. அதற்குள் தமிழ்நாட்டை மொட்டை அடித்து முடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதற்குப் பிறகு ஏதோ பெருசா ஜெயித்து விடுற மாதிரி, பன்னீர்செல்வத்தை வீழ்த்தியாச்சு என்கிற மாதிரியும் மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றார்கள் என முக ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சித்து வருகின்றார்.