மின்வாரிய ஊழியரை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரரெட்டியபட்டி பகுதியில் இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற நண்பர் இருக்கின்றார். தற்போது முன்விரோதம் காரணமாக பாலச்சந்திரன் மற்றும் மகேந்திரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மின் வாரியத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 28 – ஆம் தேதியன்று பாலச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மகேந்திரன் மற்றொருவருடன் சேர்ந்து பாலச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பாலச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து பாலசந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேந்திரன் மற்றுமொருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.