மருமகன் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கள்ளக்காரி பகுதியில் அழகு பாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இரு வீட்டாரும் இணைந்து இந்த தம்பதியினரை சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜலட்சுமியின் தந்தையாரான பொன்னையா, முனியம்மாள் உள்ளிட்ட 4 பேரும் அழகு பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அழகு பாண்டி மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு அழகு பாண்டி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்த காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.