Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விலங்குகளின் பாதுகாப்பிற்காக…. தீவிரமாக நடைபெறும் பணி… சிறப்பாக செயல்படும் வன ஊழியர்கள்…!!

வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக வனப்பகுதியில் இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை, மொரப்பூர், கோட்டப்பட்டி போன்ற வனச்சரகங்கள் இருக்கின்றன. இந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றி, மான், மயில், குரங்கு போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீரை தேடி விவசாய கிணறுகளுக்கு வரும் இந்த விலங்குகளை சில மர்ம நபர்கள் வேட்டையாடுகின்றனர்.

மேலும் இவ்வாறு தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் நீர்நிலைகளில் தவறி விழுவது, சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதி உயிரிழப்பது போன்ற அபாயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு மொரப்பூர் சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் இருக்கும் தொட்டிகளில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பும் பணியில் வனச்சரக அலுவலர் சிவக்குமார், வனக்காவலர்கள் போன்றோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கோட்டப்பட்டி, மொரப்பூர் போன்ற வனப்பகுதிகளில் இருக்கும் தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்பும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |