கொரோனவால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம் உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் நாடு முழுவதும் இறுதி தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் யூஜிசி வழிகாட்டுதல்படி கட்டாயம் நடத்த வேண்டும். இறுதித்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருந்த நிலையில், தற்போது யூஜிசி சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories