Categories
சென்னை மாவட்ட செய்திகள்

TET தேர்வு இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் – பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு…!!!

ஆசிரியர் தகுதி தேர்வின் இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று  பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரணியர் இயக்க தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர் தகுதி தேர்வின் இறுதி முடிவு இன்னும் 20 நாட்களில் வெளியிடப்படும் என்று நேரடியாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து  தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் முழுவதும் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் அடுத்த வாரம் முதல் தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.

 

Image result for பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

 

மேலும் நீட் தேர்வு பயிற்சிக்காக 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் அடுத்த ஆண்டிலுருந்து சாரண-சாரணியர் இயக்க மாணவர்களுக்கு  இலவச  சீருடைகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக்கயிறு கட்டும் பழக்கத்தில்,பள்ளிகளில் ஏற்கனவே எடுத்திருக்கும் விதி முறைகளை மேலும் பின்பற்ற வேண்டும் என்றும், பகுதிநேர ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |