கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழக அரசின் அரியர் தேர்வு ரத்துக்கு தடை கோரிய வழக்கில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என யூஜிசி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கின்றது. கொரோனா காரணமாக பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து பட்ட படிப்புகள் தேவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் காரணமாக முதலாம்,இரண்டாம் ஆண்டு கலை அறிவியல் படிப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. இதனை எதிர்த்து 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.ொ தொடர்ச்சியாக இது சம்பந்தமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் கல்லூரிகளில் இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் யுஜிசி பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.