நேற்று காலமான ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி (வயது 75) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ரத்தம் சார்ந்த பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் நேற்று இரங்கல் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக செயல்தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமான ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி உடலுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இறுதி அஞ்சலி
முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜி இறுதி அஞ்சலி
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இறுதி அஞ்சலி