Categories
மாநில செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலை.-யில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த உத்தரவு!!

திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் ஆன்லைனில் தேர்வு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் தேர்வு நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 5ம் கட்டமாக ஊரடங்கு 78வது நாளாக அமலில் உள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தற்போது வரை பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் உள்ளன.

அதேபோல், பள்ளி மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புகளுக்கு உயர்ந்தபட்டனர்உயர்த்தப்பட்டனர். நேற்றையதினம், 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் தேர்வின்றி ஆல்பாஸ் செய்யப்படுவதாகவும் முதல்வர் அறிவித்தார். அதற்கான ஆணையும் இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதேபோல, தற்போது திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைனில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |