கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக உயர் கல்வி துணை முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கர்நாடக உயர்கல்வித் துறையை நிர்வகிக்கும் துணை முதல்வர் அஸ்வந்த் நாராயணன்நேற்று பெங்களூர் செய்தியாளர்களிடம் பேசுகையில் : “கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கல்லூரித் தேர்வுகளை நடத்த இயலாத நிலை உருவாகியுள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இளங்கலை, முதுகலை, பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களின் 2019-20-ம் ஆண்டுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்படும்.
கல்லூரிகளில் இறுதி ஆண்டு மற்றும் இறுதிப் பருவத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பரில் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளை நினைவில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். 2020 மற்றும் 2021-ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ, பொறியியல், வேளாண் பொது நுழைவுத்தேர்வு ஜூலை 30,31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் . கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை ஆகஸ்டில் தொடங்கலாம் என்றும் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைன் கல்வி வழியாக பாடங்களை கற்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.