வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த ரூ.30 லட்சம் நகைகளை மீட்டு நிதி நிறுவன ஊழியர்களே மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மாநில மேலாளர் பீம்சிங் கடந்த வாரம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் 2 பேர் அடமானம் வைத்த ரூ.30 3\4 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலாளர் பீம்சிங் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை மேலாளர், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் மேலாளர் தனசேகர், ஊழியர்கள் விஜயலட்சுமி, செந்தில், செல்வன் ஆகியோர் வாடிக்கையாளர்கள் மணிமாறன் மற்றும் சபரிநாதன் ஆகியோர் அடகு வைத்திருந்த 641 கிராம் தங்க நகைகளை அவர்களது ஆதார் கார்டுகளை ஸ்கேன் செய்து நகைகளை மீட்டு கொண்டது போல் அபேஸ் செய்துள்ளனர். இதனையடுத்து கடலூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.30 லட்சத்திற்கு அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பீம்சிங் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனசேகரன், விஜயலஷ்மி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.