Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் வழங்க இருப்பதாக வந்த மெசேஜ்…. ரூ.13 லட்சத்தை இழந்த பள்ளி முதல்வர்…. போலீஸ் விசாரணை….!!

ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆசீர்நகர் பகுதியில் செல்வ விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இவரது வாட்ஸ்-அப் நம்பருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த காரை இந்தியாவில் முதன்முதலாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம் என கூறியுள்ளார். அதற்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் வங்கி கணக்கை அனுப்பியுள்ளார்.

இதனை நம்பிய செல்வவிநாயகம் ரூ.13 லட்சத்தை மூன்று முறையாகப் பிரித்து அனுப்பியுள்ளார். அதன்பின் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்வவிநாயகம் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |