Categories
Uncategorized உலக செய்திகள்

பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம்… பக்ரீத் பண்டிகைக்கு கால்நடை வாங்க முடியாத நிலை…!!!

பாகிஸ்தான் நாட்டில் 13 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் ஏற்பட்டிருப்பதால் பக்ரீத் பண்டிகைக்கு கால்நடை வாங்க முடியாத நிலையில் மக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடு பணவீக்கம் அதிகரிப்பு, நடப்பு கணக்கு தட்டுப்பாடு, அன்னிய செலவாணி கையிருப்பு குறைவு போன்ற பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து பண வீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது.

இதனால், மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்நிலையில், பக்ரீத் பண்டிகை அடுத்த வாரத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகைக்காக இஸ்லாமியர்கள் ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் போன்ற கால்நடைகளை வாங்குவார்கள். ஆனால் தற்போது பணவீக்கம் அதிகரித்திருப்பதால் கராச்சி மாநிலத்தின் சந்தையில் கால்நடைகளின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Categories

Tech |