Categories
அரசியல்

சீனா இலங்கையை நெருங்காமல் இருக்க…. “நான் ஒரு யோசனை சொல்றேன்”…. அத கேளுங்க….!!!!

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி சீன நாட்டுடன் இலங்கை நெருக்கமாவதை தவிர்க்க, அந்நாட்டிற்கு ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் கடனை உடனடியாக கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.

இலங்கையில் சமீப மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசியமான பொருட்களுக்கான விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் அங்கு பஞ்சம் உருவாகும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு சீனா, இலங்கைக்கு அதிகமாக கடன் கொடுத்து அந்நாட்டின் பொருளாதார மையங்களை கைப்பற்றி வருகிறது. இந்நிலையில் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மகிந்த ராஜபக்சே, தலைமையில் இருக்கும் இலங்கை அரசுக்கு இந்தியாவின் சார்பில் ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் கடனாக அளிக்க வேண்டும்.

இலங்கை அரசின் கடனை உடனே ஒதுக்கீடு செய்வதால், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், நம் கூட்டாளியை பெற முடியும். இல்லையெனில் சீன நாட்டிற்கு இலங்கை நெருக்கமாகி விடும் என்பதை தவிர்க்க இயலாது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |