பைனான்சியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்றல் நகர் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் வீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். இவருடைய மனைவி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இதனையடுத்து அவருடைய மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது முருகானந்தம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவரை மர்மநபர் யாரோ அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தாழையூத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முருகானந்ததிற்கும் அவரது தம்பிக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. எனவே முருகானந்தத்தை அவர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அவரது தம்பி முருகானந்தத்தின் தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.