Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக + பாஜக….! ”ரெண்டுமே வேண்டாம்” முழக்கமிடுங்க – ஸ்டாலின் வேண்டுகோள் …!!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அதிமுக அரசின் முடிவை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் போரட்டம் நடத்துகின்றன

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு அதிமுக கூட்டணியில் உள்ள பாமக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே நேர்கோட்டில் நின்று டாஸ்மார்க் திறப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இன்று போராட்டம் அறிவித்துள்ளது.இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில்,

அரசாங்கம் மீற சொல்லுது:

கொரோனா என்ற கொடூர வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி விட்டது. அதை ஏற்படுத்துகிற பாதிப்பும் அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்பும் அச்சம் தருவதாக இருக்கிறது. மே 7ஆம் தேதியிலிருந்து மதுபான கடைகளை திறக்க அறிவித்துள்ளார்கள். மக்களை அதிகமாக கூட கூடாதுனு சொல்லுறதும் அரசாங்கம்தான். மதுக்கடைகளை திறந்து வைக்கிறதும் அரசாங்கம்தான். அரசாங்கம் போட்ட சட்டத்தை அரசாங்கமே மீற சொல்லுது.  எந்த நோய் பரவக் கூடாதுனு நினைக்கிறோமோ அது, இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையாலே அதிகமாக பரவ போகுது. இப்படி இந்த தமிழக அரசின் அலட்சியத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மத்திய, மாநில 2 அரசையும் கண்டியுங்க:

கொரோனா நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடு முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் , மீட்பு நடவடிக்கை, மறுவாழ்வு பற்றி கவலைப்படாமல் திடீரென மதுபான கடைகளை திறப்பதில்  மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசை கண்டிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு போதிய நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்தும் மே 7-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் கருப்பு சின்னம் அணிந்து என்று திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்.

முழக்கமிடுங்க:

மே 7ஆம் தேதி காலையில் 10 மணிக்கு அவரவர் வீட்டுக்கு முன்னால் கூடி, கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசை கண்டிக்கிறோம் என முழக்கமிடுங்கள். அதிகபட்சம் 15 நிமிடங்கள் முழக்கம் இடுங்கள். 5 பேருக்கு மிகாமல் கூடுவதை  தவிர்க்கவும். இது அரசியலுக்காக அல்ல. மக்கள் மீதான அக்கறையால் செயல்படுவது, செய்ய வேண்டியது. அலட்சியமும்,  ஆணவமும் கொண்ட தமிழக அரசை செயல்பட வைப்பதற்கு இதை செய்ய வேண்டும்.

போராட்டம் நடத்தலாமா?

இந்த நேரத்தில் போராட்டம் நடத்தலாமா ? என்று சிலர் கேட்கலாம் மக்களை காக்க வேண்டிய நேரத்தில் காக்கத் தவறும் அரசுக்கு எதிராக எப்போதும் போராட்டம் நடத்தலாம் அதில் தப்பில்லை. கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம் என்று முழங்குவோம். தமிழக மக்கள் அணியப் போகும் கருப்பு சின்னம் அதிமுக அரசின் கண்களை திறக்கட்டும்

Categories

Tech |