கொரோனாபாதிப்பு அதிகம் உள்ள இக்காலகட்டத்தில் உயிரைப் பனயம் வைத்து சேவை செய்பவர்களை தாக்கினாலோ, துன்புறுத்தினாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கண்டு நாட்டு மக்கள் அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சூழ்நிலையில், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் தங்களது உயிரை பனையம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு நாம் உரிய மரியாதையை செலுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. தற்போது சமீபத்தில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இவரை சென்னையில் இறுதிச் சடங்கை செய்ய அனுமதிக்காமல் மக்கள் சிலர் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். தற்போது மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் , இக்கட்டான காலகட்டத்தில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி,
மருத்துவர்களையோ, துப்புரவு பணியாளர்களையோ அல்லது கொரோனாவுக்கான பணியில் ஈடுபடும் சேவையாளர்களையோ தாக்கினால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், அதேபோல் அவர்களை துன்புறுத்தினால் ரூபாய் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.