நெல்லையில் பொது இடத்தில் முக கவசத்தை அணியாத 306 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதத்தை விதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றினுடைய தாக்கம் மிகக்கடுமையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் தற்போது முழு ஊரடங்கையும் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும் பொது மக்களை வெளியே செல்லும்போது தனிமனித இடை வெளியை கடைபிடிக்கவும், முகக் கவசத்தை அணியவும் வலியுறுத்தியது.
இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருநெல்வேலியில் பொது இடங்களில் முக கவசத்தை அணியாத 306 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதத்தை விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 7 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.