பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்ற இரண்டு பேருக்கு ரூ. 500 வீதம் ஆயிரம் ரூபாயும், முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிந்த 34 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.6,800-ம் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் முககவசம் அணியாத 3 பேருக்கு மொத்தம் ரூ.600-ம், வருவாய்த்துறை சார்பில் முககவசம் அணியாத 18 பேருக்கு அபராதமாக மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600-ம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.