பிரான்சிலுள்ள பிரபல அமைப்பு ஒன்று இணையதள நிறுவனமான கூகுளுக்கு சுமார் 50 கோடி யூரோவை அபராதமாக விதித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஊடகங்கள் தாங்கள் சேகரிக்கும் செய்திகளை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு பிற ஊடகங்கள் வெளியிடும் செய்தியினை பிரபல வலைதள நிறுவனமான கூகுள் தங்களது தேடுதல் பக்கத்தில் பயன்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையை பிரான்ஸின் போட்டியிடும் ஒழுங்காற்று அமைப்பு நடத்தி வந்துள்ளது. அதன் முடிவில் கூகுள் நிறுவனத்திற்கு போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு சுமார் 50 கோடி யூரோவை இந்திய மதிப்பில் சுமார் 4,400 கோடியை அபராதமாக விதித்துள்ளது.
அதோடு மட்டுமின்றி கூகுள் நிறுவனத்திற்கு விதித்த இந்த அபராதத் தொகையை பிரான்ஸ் நாட்டின் பிற செய்தி சேகரிக்கும் நிறுவனங்களுக்கு எவ்வாறு வழங்கப் போகிறது என்பதை இன்னும் 2 மாதங்களுக்குள் கூறவேண்டும் என்றும் பிரான்ஸின் ஒழுங்காற்று அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதனை தவறும்பட்சத்தில் கூகுள் நிறுவனத்திற்கு தினந்தோறும் 9 லட்சம் யூரோ அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.