144 தடையை மீறி வெளியே வந்தவர்களிடம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 1.47 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்களை தவிர தேவையின்றி ஊரை சுற்றி வருபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும்,
அபராதம் விதித்தும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்தும் தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் இதுவரை ஊரடங்கு மீறிய குற்றத்திற்காக 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் 2,27,325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2,55,538 பேர் மீது இன்னும் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை வரலாறு காணாத வசூலாக ஊராடங்கை மீறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு ரூ1.46 கோடி வசூல் ஆகி உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.