கள்ளக்குறிச்சியில் முகக்கவசம் அணியாத 200 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டு, இன்றுவரை 5வது கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. 5வது கட்டமாக ஊரடங்கு தொடர்ந்தாலும், அதில் பல்வேறு தளர்வு ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்த நிலையில், தனி கடைகளும் திறந்து சமூக இடைவெளியுடன் வியாபாரங்களை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, கடை வைத்து நடத்துவோர், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் என அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றுவது முககவசம் அணிவது உள்ளிட்டவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மக்கள் பெரும்பாலானோர் அதனை முறையாக கடைபிடிப்பதில்லை. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் காவல் துறை, சுகாதாரத் துறை,வருவாய் துறை உட்பட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமும், முக கவசம் அணியாதவர்களிடமும் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அதன்படி, கல்லக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பேருந்து நிலையம் கடைவீதி மற்றும் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும் முக கவசம் அணியாமல் வருவதாகவும், கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை உள்ளிட்ட விதிமீறல்கள் ஈடுபட்டவர்கள் 200 பேரிடம் தலா 100 ரூபாய் வீதம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
மேலும் கொரோனா குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எத்தனை முறை அபராதம் விதித்தாலும், நூதன முறையில் தண்டனைகள் அளித்தாலும், மக்கள் புரிந்து கொள்வது கடினம். சுயமாக விழிப்புணர்வுகளை அறிந்து, உணர்ந்து சுய கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.