Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை முதல்….. குப்பையையும் கொட்ட கூடாது….. மீறினால் அபராதம்….. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை….!!

நாளை முதல் பின்பற்றபட கூடியவையாக சென்னை மக்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரதுறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்திலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன்  நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நான்காவது கட்ட தளர்வில் பல விதிமுறைகள் விலக்கப்பட்டதால், பொதுமக்கள் பொதுவெளியை பயன்படுத்துவது அதிகமாகும்.

இதனால் பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடும் என்பதால், பாதிப்பை தடுக்க சில கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது. அதன்படி, சென்னையில் நாளை முதல் பொது இடங்களில் எச்சில் துப்பினால், குப்பை கொட்டினால் தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |