நெல்லையில் பொது இடத்தில் முக கவசத்தை அணியாத 350 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் தற்போது முழு ஊரங்கையும் தமிழக அரசு அமலுக்குக் கொண்டு வந்தது. இதனை மீறுபவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இடத்தில் முக கவசத்தை அணியாத 350 நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 11 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.