பொது இடத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திட்டச்சேரி பேரூராட்சியில் செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமநாதன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.
அப்போது சாலையில் செல்பவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் ஓட்டிக் கொண்டு சென்றால் அவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்துள்ளனர். மேலும் சாலைகளில் எச்சில் துப்புவோருக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து வசூலித்தனர்.