Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலை பாதுகாப்பு விழா… விதிமுறைகளை மீறியவர்கள்… அபராதம் விதித்த போலீசார்…!!

சாலை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 17 பேருக்கு 9,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டம் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குணசேகரன், செந்தில்குமார் மற்றும் காவலர் சத்யராஜ் போன்றோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.

மேலும் போலீசார் நடத்திய சோதனையில் சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும் சாலை விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அதன் படி சாலை விதியை மீறிய குற்றத்திற்காக 17 பேரிடம் இருந்து 9,200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |