Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. இன்று முதல்… ரூ200 அபராதம்..!!

மதுரையில் முககவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், மக்களின் சின்ன சின்ன அலட்சியங்களும், கொரோனா குறித்த புரிதல் இல்லாததன் காரணமாகவும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முகக்கவசம் இல்லாமல் வெளியே வரக்கூடாது எனவும், வெளியே வரும்போது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வரும் சமயத்தில், மக்கள் அதனை கடைப் பிடிக்காமல் இருப்பது அதிகாரிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துகிறது.

எனவே முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற முறையும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, இன்று முதல் மதுரையில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு பிடிக்கப்பட்ட இடத்திலேயே(Spot Fine) ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில் யாருக்கும் பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |