விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 10 லாரிகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்கு சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது 10 லாரிகளில் அளவுக்கதிகமான ஜல்லி கற்கள் லோடு ஏற்றி சென்றது தெரியவந்துள்ளது. இதனால் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் லாரிகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.