விதிமுறையை மீறிய குற்றத்திற்காக தனியார் ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு ஊட்டி கமர்சியல் சாலையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கப்புகளை உபயோகிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் எம்.காந்திராஜனின் உத்தரவின் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஹோட்டலுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட 2 1/2 கிலோ கப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஹோட்டல் உரிமையாளருக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.