கொரோனா தொற்று கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் பொது மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
இதனை அடுத்து முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணித்தவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பின் அதிகாரிகள் அரசு நெறிப்படுத்திய விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.