கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து 37, 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது துறையினர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் முக கவசம் அணியாமல் சென்ற 66 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறாக விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காகஇதுவரை 37, 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.