Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இப்படித்தான் வெளிய வரணுமா…? அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

முகக்கவசம் அணியாத 20 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள துணி மற்றும் நகைக் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அதிகாரிகள் தொற்று பரவும் வண்ணம் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 20 பேரை பிடித்துள்ளனர். அதன் பின் அதிகாரிகள் அவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து தான் வர வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |