பிரிட்டனில் இளைஞர் ஒருவர் வேலியைத் தாண்டிய போது விரல் துண்டாகி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனிலுள்ள, Southampton என்ற நகரில் 28 வயதுள்ள இளைஞர் ஒருவர், ஒரு வேலியில், குதித்து தாண்டியிருக்கிறார். அப்போது அவரின் விரல் துண்டாகி கீழே விழுந்துவிட்டது. அதன்பின்பு ஒரு நபரிடம் துணியை வாங்கி கையில் சுற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றிருக்கிறார். அந்த இடத்தில் விரல் கிடந்ததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அந்த நபரை தேடி வந்துள்ளனர். அதன்பின்பு ஒரு கட்டிடத்தில் அவர் இருப்பது கண்டறியப்பட்டது. அவரின் விரல் துண்டானதால், அதிலிருந்து, அதிக ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. எனவே காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.