பிரபல தொகுப்பாளர் மாகாபாவிற்கு திடீரென கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
விஜய் டிவியின் மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் மாகாபா. இவர் தொகுத்து வழங்கும் அழகிற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் கலகலப்பாக நடந்து கொள்வார். இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் தொகுப்பாளர் மாகாபாவிற்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை மாகாபா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதனுடன் எக்ஸ்ரே புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதனைக்கண்ட அவரது ரசிகர்களும், பிரபலங்களும் விரைவில் குணமடைய வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.