தமிழகத்தில் வெயில் படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வங்கக் கடலின் உருவான ஆம்பன் புயல் ஈரப்பதத்தை இழுத்து சென்றதால் தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
மேலும் திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, சென்னை, வேலூரில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் கத்தரி வெயில் இன்றுடன் முடிந்ததால் , படிப்பாடியாக வெயிலின் தாக்கம் குறையும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் அனல் காற்று எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.