Categories
உலக செய்திகள்

“கிளப்பில் விடிய விடிய ஆட்டம் போட்ட பிரதமர்”…. சர்ச்சையை கிளப்பிய வீடியோ…. மக்களிடம் பகிரங்க மன்னிப்பு….!!

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் கொரோனா விதிமுறைகளை மீறி இரவு நேர கிளப்பில் விடிய விடிய நேரம் கழித்ததற்காக பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அந்நாட்டின் பிரதமர் சன்னா மரின் ( 36 ) அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அதிகாலை 4 மணி வரை ஹெல்சின்கியில் உள்ள Butchers என்ற இரவு நேர கிளப்பில் விடிய விடிய நடனமாடி பொழுதை கழித்துள்ளார்.

அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் கொரோனா விதிமுறைகளை மீறி இரவு நேர கிளப்பில் விடிய விடிய நேரம் கழித்தற்காக பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Categories

Tech |