Categories
உலக செய்திகள்

இதுவரை 70 வீடுகள் நாசம்… ஆயிரம் வீடுகள் சாம்பலாகும் என்று எச்சரிக்கை… ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத் தீயின் அபாயம்…!

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயினால் இதுவரை 70க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலான நிலையில் மேலும் 1000 வீடுகளுக்கு தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பெர்த் நகரத்தில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத் தீ சுமார் 80 மீட்டர் சுற்றளவுக்கு பரவியுள்ளது. இதனால் தற்போது வரை 70 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. தற்போது காற்றின் வேகம் மிகவும் அதிகரித்துள்ளதால் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகப் போவதாக சொல்லப்பட்டுள்ளது.

அப்பகுதியில் சுமார் 70 மீட்டர் சுற்றளவில் கரும்பு கைகள் காணப்பட்டு வருகிறது. ஆகையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வான்வழி ரேங்கர்கள், 21 விமானங்கள், 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 11 முறை தீயின் மேற்பரப்பிலிருந்து வான்வழி ரேங்க்கர்கள் மூலம் சுமார் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் கொட்டப்பட்டது. இத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதி வாரணம் அழிக்க முடிவு செய்துள்ளது. பெரியவர்களுக்கு 1000 டோலரும் சிறியவர்களுக்கு 400 டோலரும் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |