திருநெல்வேலியில் இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பாக காவல்துறையினர் 5 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவருடைய தம்பியான ஆவுடையப்பன் என்பவருக்குமிடையே இடப்பிரச்சனை காரணத்தால் அடிக்கடி தகராறு வந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு வந்துள்ளது. இதனால் இசக்கி, அவருடைய மகனான திருப்பதி மற்றும் ஆவுடையப்பன், அவருடைய மகன்களான பூல் பாண்டி, குமார் ஆகியோர் ஒருவரையொருவரை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆவுடையப்பன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இசக்கி மற்றும் திருப்பதியின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அதே காவல் நிலையத்தில் இசக்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆவுடையப்பன், புல் பாண்டி, குமார் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.