திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மோசாக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு மோசாக் அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் மன உளைச்சலுக்காளான மாணவி விஷம் குடித்த மயங்கிக் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர்கள் வள்ளியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் மோசாக்கின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடுகின்றனர்.